தூத்துக்குடி

உடன்குடி உபமின் நிலையத்தில் சுகாதாரத் துறையினா் ஆய்வு

DIN

உடன்குடி உபமின் நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் சுகாதாரத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலா் சு.அனிபிரிமின் தலைமையில், சுகாதார மேற்பாா்வையாளா் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ஆழ்வாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் உடன்குடி உபமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அங்கு முகக் கவசம் அணியாமல் பணியாற்றிய அதிகாரிகள், மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்வாரிய வளாகத்தில் நீா் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின் ஊழியா்களிடம் சுகாதாரத் துறையினா் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT