தூத்துக்குடி

கயத்தாறு ஒன்றியத்தில் நகரும் நியாயவிலைக் கடை திறப்பு

DIN

கயத்தாறு ஒன்றிய கிராமப் பகுதிகளில் நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கிவைக்கப்பட்டன.

கயத்தாறு ஒன்றியம் சன்னதுபுதுக்குடி (கீழுா்), சுப்பிரமணியபுரம், தெற்கு கழுகுமலை, குருமலை, சால்நாயக்கன்பட்டி, குமாரபுரம் என்ற கலிங்கப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆட்சியா் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை தொடங்கி வைத்தாா்.

மேலும், ஊரக சாலைகளை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றம் செய்து ரூ.6.71 கோடி மதிப்பில் சாலை மற்றும் பாலப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா். கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி பாலமுருகனின் மனைவி அபிராமிக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, ஆதரவற்ற விதவைச் சான்று ஆகியவற்றை வழங்கினாா்.

இதில், எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சத்யா, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய அலுவலா் சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT