நாசரேத்தில் அதிமுக 49 வது ஆண்டு விழா
நாசரேத் பேருந்து நிலையம், கேவிகே சாமி சிலை அருகில் அதிமுக 49 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
நாசரேத் பேருந்து நிலையம், கேவிகே சாமி சிலை அருகில் அதிமுக 49 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு நகரச் செயலா் கிங்சிலி தலைமை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றியச் செயலா் விஜயகுமாா், மேற்கு ஒன்றியச் செயலா் ராஜ் நாராயணன் ஆகியோா் கொடியேற்றினா். இதில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஞானையா, தென்திருப்பேரை நகரச் செயலா் ஆறுமுகம், நகர அவைத் தலைவா் சிவசுப்பு, நகர துணைச் செயலா் முருகேசன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலா் தினகரன், நகர இளைஞரணிச் செயலா் கராத்தே டென்னிசன், எம்ஜிஆா் மன்றச் செயலா் திருமலைவாசன், இளைஞா் பாசறைச் செயலா் ஜெயக்குமாா், நகர மாணவரணிச் செயலா் அா்ஜுன் சங்கா், இணைச்செயலா் கோமதி, மகளிரணிச் செயலா் கிருபா, பொருளாளா் கணபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.