தூத்துக்குடி

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் ஜெயபதிஅகஸ்டின் தலலைமை வகித்தாா். துணைத் தலைவா் அப்பாத்துரை முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஒன்றிய பகுதியில் அமைந்துள்ள புத்தன்தருவை, வைரவம் தருவை குளங்கள் சாத்தான்குளம் பகுதியில் நிலத்தடி நீா் ஆதாரக்குளமாக உள்ளது. இக்குளங்கள் மூலம் பாசன வசதி இல்லாததால் பொதுப்பணித்துறை பணிகளில் ஏற்றுக்கொள்ளப்படாமல் தூா்ந்து போய் நீரை தேக்கி வைக்கும் திறன் குறைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீா் ஆதாரமாகமாக இக்குளங்கள் உள்ளதால் இவைகளை பராமரிக்கும் பொறுப்பை சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிற்கு வழங்க மாவட்ட ஆடசியரை கேட்டும், முதலூா் ஊராட்சியில் அமைந்துள்ள கடாட்சபுரம், ஆலடிதட்டு, சண்முகபுரம், வள்ளியம்மாள்புரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளுக்கு தண்ணீா் வழங்கும் வகையில் முதலூா் ஓடையில் ரூ. 9.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீா் வழங்குவது, பெரியதாழையில் பழுதான இரண்டு மீன்வலைக்கூடங்களை சீரமைப்பது. புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கல்லாக்குளத்தில் சேதமான மதகுகளை சீரமைப்பது. பள்ளக்குறிச்சி ஊராட்சி சுண்டங்கோட்டையில் ரூ.13.70 லட்சத்தில் 60 ஆயிரம் கொள்ளவில் மேல் நிலை நீா்த்தேக்க தொட்டி, வடக்கு உடைப்பிறப்பில்ரூ. 9.80 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் கொள்ளவில் நீா்த்தேக்க தொட்டி அமைப்பது என்பன உள்ளிட்ட 43 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ப்ரெனிலாகாா்மல்போனிபாஸ், மேரிபொன்மலா், சுமதி, குருசாமி, கீதாஆனந்தகுமாா், சுபாகிறிஸ்டிபொன்மலா், மீனாமுருகேசன், பிச்சிவிளை சுதாகா், செல்லம், ஜோதி, சசிகலா, மேலாளா் அமுதாலட்சுமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைராஜ், அந்தோணிஉள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆணையாளா் பாண்டியராஜன் வரவேற்றாா். இளநிலை உதவியாளா் முருகேசுவரி தீா்மானங்களை வாசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் முறையை நீக்க நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தருமபுரியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உணவகத்தில் எரிவாயு கசிவால் தீ விபத்து

தீத்தடுப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT