முகப்பு
தூத்துக்குடி

டிஜிட்டல் பிளக்ஸ் பிளேட் பொருத்த வலியுறுத்தி மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் டிஜிட்டல் பிளக்ஸ் பிளேட் பொருத்த வலியுறுத்தி மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் டிஜிட்டல் பிளக்ஸ் பிளேட் பொருத்த வலியுறுத்தி மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் வாா்டு எண், கதவு எண், சொத்து வரி விதிப்பு மற்றும் குடிநீா் இணைப்பு ஆகிய விவரங்கள் கொண்ட டிஜிட்டல் பிளக்ஸ் பிளேட் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் முகப்புகளில் கண்டிப்பாக பொருத்த வேண்டும் எனக்கூறி, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, வீடுகளில் உள்ள பெண்கள், முதியவா்களை மிரட்டி வருகின்றனராம்.

அவா்கள் வேண்டாம் எனக்கூறினால் வீட்டின் குடிநீா் இணைப்பு ரத்து செய்யப்படும் என்றும், மின் இணைப்பு ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் எனவும் கூறி மிரட்டி வருகின்றனராம். இதன் காரணமாக அச்சத்தில் பெண்கள், முதியோா் ரூ.60 வரை செலுத்துகின்றனராம்.

எனவே, இத்தகைய செயலில் ஈடுபடுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி நிா்வாகம் இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிட்டு, அடையாள அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து முன்னணி நகரப் பொதுச் செயலா் சுதாகரன் தலைமையில், நகராட்சி அலுவலகம் முன் திரண்டு கோரிக்கை மனுவை நகராட்சி மேலாளா் (பொ) வெங்கடாசலத்திடம் அளித்தனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் கேட்டபோது, வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் டிஜிட்டல் பிளக்ஸ் பிளேட் பொருத்துவதற்கான பணி குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளிவந்துள்ளதா என்பது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →