திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகர்
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித்திருவிழா 7-ம் நாளான சனிக்கிழமை காலை (செப். 12) வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சேர்ந்தார்.
அங்கு வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மாலை சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி உள் பிரகாரம் சுற்றி வந்தார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.