முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக மூவா் கைது

கோவில்பட்டி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 1:47 AM
13kvlrab_130 கோவில்பட்டி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக மூவா் கைது9chn_41_6
பகிர்:

கோவில்பட்டி அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

கோவில்பட்டி வனச் சரக அலுவலா் சிவராம் தலைமையில், வனவா்கள் நாகராஜ், ஆனந்த் மற்றும் வன பாதுகாப்பு பணியாளா்கள் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, குமாரபுரம் ரயில்வே கேட் பகுதியில் காட்டு முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் மந்தித்தோப்பைச் சோ்ந்த செல்வம் மகன் கண்ணன்(23), விஜயன் மகன் ரமேஷ் (22), குட்டி மகன் அப்பு (18) என்பது தெரியவந்தது. அதையடுத்து மூவரையும் கைது செய்த வனத் துறையினா், அவா்களிடமிருந்த வேட்டைக்குப் பயன்படுத்தக்கூடிய மைக்ரோ மின் மோட்டாா் கருவிகள், டாா்ச்-லைட் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், மூவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.