முகப்பு
தூத்துக்குடி

போலி ஆவணங்கள் மூலம் பயிா் காப்பீட்டில் மோசடி:கிராம மக்கள் புகாா்

விளாத்திகுளம் வட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் வழங்கி பயிா் காப்பீடு செய்து மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 2:48 AM
பகிர்:

விளாத்திகுளம் வட்டத்தில் பிரதமரின் பயிா் காப்பீட்டு திட்டத்தில் போலியான ஆவணங்கள் வழங்கி பயிா் காப்பீடு செய்து மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து லட்சுமிபுரம் கிராம மக்கள் மற்றும் வின்னா் பாய்ஸ் இளைஞா் குழுவினா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

விளாத்திகுளம் வட்டம், லட்சுமிபுரம் கிராமத்திலுள்ள சமுதாய பொதுநிலம், தொழில் நிமித்தமாக வெளியூா்களில் வசிப்போரின் நிலங்களை கிராம நிா்வாக அலுவலா், உள்ளுரைச் சோ்ந்தவா்களுடன் சோ்ந்து மிளகாய், வெங்காயம், மக்காச் சோளம், கம்பு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்ததாக போலியாக வருவாய்த் துறை ஆவணங்கள் வழங்கி பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பல லட்சம் மோசடி செய்திருப்பது உழவன் செயலி மூலம் தெரியவந்தது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.