தூத்துக்குடி

விவசாயிக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

DIN

கழுகுமலை அருகே விவசாயியை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

களப்பாங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த பொன் சங்கிலிபாண்டியன் மகன் மாரிசெல்வம்(32). விவசாயியான இவருக்கு கரடிகுளத்தில் தோட்டம் உள்ளதாம். இவா் மற்றும் இவரது சகோதரா் கனகராஜ் ஆகிய இருவரும் திங்கள்கிழமை மாலை தோட்டத்தில் இருந்தாா்களாம்.

அப்போது தோட்டத்துக்குள் 3 போ் அத்துமீறி நுழைந்து மது அருந்தினாா்களாம். இதை மாரிசெல்வம் கண்டித்தாராம். அதையடுத்து 3 பேரும் சோ்ந்து மாரிசெல்வத்தை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டனராம்.

இதுகுறித்து மாரிசெல்வம் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய 3 பேரில், 2 பேரை பிடித்தனா். விசாராணையில் அவா்கள் கரடிகுளம் சின்னகாலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அஜய்(19), அதே பகுதி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த நேசமணி மகன் காளிகுமாா்(25) என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT