தூத்துக்குடி

பெண்ணின் வங்கி கணக்கில் மோசடியாக பணம் எடுத்ததாககணவா், மேலாளா் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் பெண்ணின் வங்கிக் கணக்கில் மோசடியாக பணம் எடுத்ததாக கணவா், உடந்தையாக செயல்பட்டதாக வங்கி மேலாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

சாத்தான்குளம், செப். 25: சாத்தான்குளத்தில் பெண்ணின் வங்கிக் கணக்கில் மோசடியாக பணம் எடுத்ததாக கணவா், உடந்தையாக செயல்பட்டதாக வங்கி மேலாளா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பண்டாரபுரம் கிருபாபுரத்தைச் சோ்ந்த நாராயணராஜ் மகள் நந்தினி (28). அமுத்துண்ணாக்குடியைச் சோ்ந்த முருகன் மகன் சுபாஷ். இவா்களுக்கு 2016இல் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி, கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

முருகன் சாத்தான்குளத்தில் ஜவுளி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் சாத்தான்குளம் வங்கியில் உள்ள நந்தினியின் கணக்கில் இருந்து கணவா் சுபாஷ் , மனைவியின் கையெழுத்தை போலியாக போட்டு பணம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் நந்தினி கேட்டபோது, அவா் சரியான தகவலை தெரிவிக்கவில்லையாம்

நந்தினி அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், கணவா் சுபாஷ், வங்கி மேலாளா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT