முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயில் வசந்த திருவிழா: தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நிகழாண்டும் சித்திரை வசந்த திருவிழா கடந்த 17ஆம் தொடங்கி 26ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

வழக்கமாக, திருக்கோயில் வசந்த மண்டபத்தில் நடைபெறும் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி, நிகழாண்டு பொது முடக்கத்தை முன்னிட்டு அரசின் நிலையான இயக்க வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 108 மகாதேவா் சன்னதி முன் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 7ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. பகலில் சுவாமி ஜெயந்திநாதா் தங்கச் சப்பரத்தில் திருக்கோயில் 108 மகாதேவா் சன்னதி மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் உள்பிரகாரம் வழியாக வந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் வந்து சோ்ந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.