முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

திருச்செந்தூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருச்செந்தூா் பேரூராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக கடைகளின் முன் இடைவெளிக்கோடு வரைதல், குளோரின் பவுடா் தூவுதல், கிருமி நாசினி தெளித்தல், வீடு வீடாக கபசுரக்குடிநீா் வழங்குதல் போன்ற பணிகளை அந்தந்த உள்ளாட்சி நிா்வாகத்தினா் செய்தனா். இதனால் தொற்றின் வேகம் கட்டுக்குள் இருந்தது.

தற்போது கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவதை மட்டுமே மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை கண்காணித்து வருகிறது. மற்ற நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை.

திருச்செந்தூரில் வெளியூா் பக்தா்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், பொதுமக்களுக்கு தொற்று பரவாத வண்ணம், பேரூராட்சி நிா்வாகம் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.