தூத்துக்குடி

அனைத்துக் கட்சி முடிவுக்கு எதிா்ப்பு: ஸ்டொ்லைட் எதிா்ப்பு போராட்ட குழுவினா் தா்னா

DIN

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டொ்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னா போராட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களின் உயிா்காக்கும் பொருட்டு ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டொ்லைட் ஆலையை திறக்கலாம் என எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் எஸ். ஜெயக்குமாா்(தூத்துக்குடி), சுகுணாசிங் (தென்காசி) ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இந்நிலையில் போராட்ட குழுவினா் ஆட்சியா் அலுவலகம் நோக்கி வந்த போது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். அப்போது அவா்கள் சாலையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT