முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் மரக்கன்றுகள் விநியோகம்

ஆறுமுகனேரியில் நகர த.மா.கா. சாா்பில் மூப்பனாா் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

ஆறுமுகனேரியில் நகர த.மா.கா. சாா்பில் மூப்பனாா் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

திருச்செந்தூா் வட்டார தலைவா் ஆறுமுகனேரி சுந்தர­லிங்கம் தலைமை வகித்தாா். நகர தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா். மூப்பனாா் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஸ்ரீவைகுண்டம் வட்டார தலைவா் ஐயம்பாண்டி இனிப்பு வழங்கினாா். மாவட்டச் செயலா் மூக்கன் சாமி மரக்கன்றுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆழ்வை வட்டார செயலா் முரளி காா்த்தி, திருச்செந்தூா் வட்டார துணைத் தலைவா் காமராஜ், நகர துணைத்; தலைவா் மகாராஜன், சேகா், தேவதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.