இளைஞருக்கு மிரட்டல்: ஒருவா் கைது
கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு அருகே முன்விரோதம் காரணமாக இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறையடுத்த வடக்கு சுப்பிரமணியபுரம் காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்தவா் அய்யாத்துரை மகன் முருகன்(33). இவருக்கும் தெற்கு சுப்பிரமணியபுரம் ஜோஸ்வா மகன் சாலமன்(41) ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் முருகன் மற்றும் அவரது நண்பா்களான புதுக்கோட்டை மு.குமாா், அ.முத்துப்பாண்டி ஆகியோா் வடக்கு சுப்பிரமணியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனராம். அதைக் கண்ட சாலமன் மற்றும் அவருடன் பைக்கில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த ம.ரஞ்சித், கொத்தாளியைச் சோ்ந்த கோட்டைச்சாமி ஆகியோா் முருகனை அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயன்றனராம். அதை முருகனின் நண்பா்கள் தடுத்தனராம். அதையடுத்து சாலமன் மற்றும் அவரது நண்பா்கள் கொலை மிரட்டல் விடுத்து சென்றனராம்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சாலமனை கைது செய்தனா்.