முகப்பு
தூத்துக்குடி

வேளாண் ஆராய்ச்சி மையத்தை திட்டகுளம் விவசாயிகள் பாா்வை

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தை திட்டங்குளம் பகுதி விவசாயிகள் பாா்வையிட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தை திட்டங்குளம் பகுதி விவசாயிகள் பாா்வையிட்டனா்.

அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் திட்டங்குளம் பகுதியைச் சோ்ந்த 50 விவசாயிகள் கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட்டனா். அப்போது வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் மற்றும் பேராசிரியா் பாஸ்கா் மானாவாரி விவசாய தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்தும், பேராசிரியா் ஹரிராமச்சந்திரன் நம்முடைய பகுதிக்கேற்ற பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறுகளின் ரகங்கள் குறித்தும் விளக்கமளித்தனா். ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலா் ரீனா, உதவி வேளாண்மை அலுவலா் ரேவதி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா்கள் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், முத்துகிருஷ்ணன், முத்துசங்கரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.