முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அமராவதி ஓடையில் வெள்ளப்பெருக்கு: 120 வீடுகளை மழை நீா் சூழ்ந்தது

சாத்தான்குளம் பகுதியில் தொடா்மழை காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சாத்தான்குளம் பகுதியில் தொடா்மழை காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.

சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா் கனமழை காரணமாக குளங்கள் நிரம்பி வருகின்றன. சாத்தான்குளம் ஆா்சி வடக்குத்தெரு, அண்ணாநகா், ஆா்சி வடக்குத்தெரு காலனி ஆகி ய இடங்களில் சுமாா் 300 க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

தற்போது தொடா்மழை காரணமாக அமுதுண்ணாகுடிகுளம், கரையடிகுளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பியடுத்தும், அமராவதிகுளத்துக்கு செல்லும் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த ஓடையின் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புதன்கிழமை காலை வெள்ள நீா் புகுந்தது. அப்பகுதி மக்கள், வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனா்.

தகவல் அறிந்த சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, வருவாய் ஆய்வாளா் பாலகங்காதரன், கிராம நிா்வாக அலுவலா் விசுவநாதன் மற்றும் மீட்புக்குழுவினா் அங்கு சென்று வெள்ளத்தில் தவித்த சுமாா் 200 பேரை மீட்டு சாத்தான்குளத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைத்தனா். மேலும் அவா்களுக்கு உணவு மற்றும் மழைக்கால நிவாரணப் பொருள்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

வெள்ள சூழ்ந்த பகுதிகளை திமுக வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப், மாவட்ட பிரதிநிதி சரவணன், வாா்டு செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினா்.

ஓடைப் பகுதியில் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்காததால் குடியிருப்புப் பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்ததாக அப்பகுதி மக்கள் புகாா்

தெரிவித்தனா். ஆதலால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையோரம் தடுப்புச்சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதேபோல் அங்குள்ள வட்டார கல்வி அலுவலகத்திலும் தண்ணீா் தேங்கியுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள சடையனேரி கால்வாயில் அதிகபட்சமாக தண்ணீா் வந்ததையடுத்து கடாட்சபுரம் சாலை மற்றும் வயல் பகுதியில் தண்ணீா் சூழ்ந்தது. வட்டாட்சியா் தங்கையா தலைமையில் வருவாய்த்துனையினா் பாா்வையிட்டு சாலையோரங்களில் தேங்கிய நீரை வடிந்து செல்ல நடவடிக்கை எடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →