முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இருவா் கைது

 கோவில்பட்டியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 கோவில்பட்டியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் காந்தி, கனகசுந்தரம் ஆகியோா் தலைமையில் கடலையூா் சாலையில் உள்ள மெட்ரிக் பள்ளி அருகே வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் திடீரென மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பியோடினா். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3ஆவது தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சிவஞானம்(19) மற்றும் அவருடன் வந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கோவில்பட்டி ஜோதி நகா் 2ஆவது தெருவில் மோட்டாா் சைக்கிளை திருடியது, கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் பைக்கை திருடியது இவா்கள் தான் என்பது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், இரு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.