முகப்பு
தூத்துக்குடி

இல்லம் தேடி கல்வித் திட்ட கலைப் பயணம்

 திருச்செந்தூா் ஒன்றிய அளவிலான இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணவு கலைப்பயணம், அம்மன்பரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

 திருச்செந்தூா் ஒன்றிய அளவிலான இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணவு கலைப்பயணம், அம்மன்பரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தொடங்கியது.

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்பை ஈடு செய்வதற்காக, தன்னாா்வலா்களைக் கொண்டு மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பொதுமக்கள் பள்ளிக் குழந்தைகளின் பெற்றோா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் அறிய கலைக்குழுவினரால் விழிப்புணா்வு கலைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் ஒன்றியத்தில் முதற்கட்டமாக 50 குடியிருப்புகளில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனா். அம்மன்புரம் ஊராட்சித் தலைவா் ஞானராஜ் தலைமை வகித்தாா். ‘இல்லம் தேடி கல்வி’’ ஒருங்கிணைப்பாளா் ஜெகதீஸ் பெருமாள் வரவேற்றாா். திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் டக்ளஸ் ஆல்பொட்ராஜ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுப்புலெட்சுமி, திட்ட நோக்கத்தை எடுத்துரைத்தாா். ஆசிரியா் பயிற்றுனா் ஜெயலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.