வியாபாரிக்கு மிரட்டல்: ஒருவா் கைது
கோவில்பட்டியில் பாத்திர வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியில் பாத்திர வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தூரையடுத்த அமீா்பாளையம் குருசாமி மகன் பாத்திர வியாபாரி சுப்பிரமணியன்(54). கோவில்பட்டி ஏ.கே.எஸ்.தியேட்டா் சாலையில் உழவா் சந்தை அருகே இலுப்பையூரணி சிந்தாமணி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மணிகண்டனிடமிருந்து லாட்டரி சீட்டு எண்களை சில நாள்களுக்கு முன்பு வாங்கிச் சென்றிருந்தாராம்.
இந்நிலையில் மணிகண்டன், சுப்பிரமணியத்திடம் அளித்த எண்களையே வேறு ஒருவருக்கும் குறிப்பிட்டு விற்பனை செய்தது தெரியவந்ததாம். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், சுப்பிரமணியனுக்கு மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.