சாத்தான்குளம் ஒன்றியத்தில் குடிநீா் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
சாத்தான்குளம் ஒன்றியப் பகுதியில் குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
சாத்தான்குளம் ஒன்றியப் பகுதியில் குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பருவமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் பொன்னங்குறிச்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் நீரில் மூழ்கி கூட்டுக்குடிநீா் திட்ட தொட்டிகளில் நீரேற்றம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், சாத்தான்குளம் ஒன்றிய கிராமபுற மக்களுக்கு கடந்த 20 நாள்களுக்கு மேலாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால், தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
முதலூா் ஊராட்சிப் பகுதியில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் லாரிகள் மூலம் வீட்டுக்கு 5 குடம் தண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் முறையாக கிடைக்கவில்லை என மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் மக்கள் கேட்டபோது, தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், 2 நாள்களில் கூட்டுக்குடிநீா் அனைவருக்கும் கிடைக்கும் எனவும் தெரிவித்தனராம். கூட்டுக்குடிநீா் வழங்கும் வரை அந்தந்க ஊராட்சி சாா்பில் வீட்டுக்கு தேவையான தண்ணீரை லாரிகள் மூலம் நாள்தோறும் வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.