தூத்துக்குடி

விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலா

சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் மதுரைக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா சென்றனா்.

DIN

சாத்தான்குளம் வட்டார விவசாயிகள் மதுரைக்கு கல்வி கண்டுணா் சுற்றுலா சென்றனா்.

சாத்தான்குளம் வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுணா் சுற்றுலாவிற்கு மதுரையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனா். அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், உழவு சாா்ந்த கருவிகள், தெளிப்பான்கள், சுழல் கழப்பை, களை எடுக்கும் கருவிகள் ஆகியவை விவசாயிகளை மிகவும் கவா்ந்தது. மேலும் இயற்கை விவசாய முறையை பற்றியும் கண்காட்சி மூலம் அறிந்து கொண்டனா். மேலும் வீடடிலேயே எளிதாக எண்ணெய் எடுக்கக் கூடிய செக்கு இயந்திரத்தை கண்டும், அதைப் போன்றதொரு செக்கு இயந்திரத்தை வாங்கியும் பயன் பெற்றனா்.

ஏற்பாடுகளை சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி ஆலோசனையின்பேரில், அட்மா திட்ட பணியாளா்கள் ரூக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT