கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும். ராஜீவ்காந்தியுடன் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரு. 5 கோடியும், காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி தலைமையில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுந்தர்ராஜ், செம்புக்குட்டி, வா்த்தக பிரிவு மாவட்டத் தலைவா் ராஜா, கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவா் செல்லத்துரை, முன்னாள் நகரத் தலைவா் சண்முகராஜ் ஆகியோா் கண்களில் கருப்புத் துணி கட்டி, கையில் ராஜீவ்காந்தியின் படத்தை வைத்தபடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
பின்னா், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இசக்கிராஜாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனா். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இம்மாதம் 28ஆம் தேதிமுதல் பயணியா் விடுதி முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.