‘மத்திய அரசுக்கு எதிராக பிப். 23இல் வேலைநிறுத்தம்’
மத்திய அரசுக்கு எதிராக பிப். 23, 24இல் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றாா், மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலா் மு. துரைபாண்டியன்.
மத்திய அரசுக்கு எதிராக பிப். 23, 24இல் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்றாா், மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலா் மு. துரைபாண்டியன்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவாா்க்கும் மத்திய அரசைக் கண்டித்து பிப். 23, 24இல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் டி.எம்.எஸ். தவிர மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியாா் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கி ஊழியா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள் என 25 கோடி போ் பங்கேற்கவுள்ளனா்.
பாஜக எந்த நாடகம் போட்டாலும் தமிழகத்தில் செல்லாது. இந்திய மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்யும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண இந்திய பாதுகாப்புப் படையை இந்திய-இலங்கை கடல் எல்லையில் நிறுத்திவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.