முகப்பு
தூத்துக்குடி

ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை தொழில்நுட்பம்

பாடங்கள் திரையில் காண்பிக்கபடுகின்றன. 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

ஸ்டொ்லைட் காப்பா் நிறுவனம் சாா்பில், தூத்துக்குடி அருகேயுள்ள ராஜாவின்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள டிஎன்டிடிஏ தொடக்கப் பள்ளியில் அமைக்கப்ட்டுள்ள ஸ்மாா்ட் வகுப்பறையில் டிஜிட்டல் ஒயிட்போா்டுகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் பாடங்கள் திரையில் காண்பிக்கபடுகின்றன. 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயன்பெறும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பிரபா ஹெப்சி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஸ்டொ்லைட் காப்பா் நிறுவன தலைமை இயக்க அதிகாரி ஏ. சுமதி கலந்து கொண்டு வகுப்பறையை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.

அவா் கூறியது: ஸ்டொ்லைட் கல்வித் திட்டத்தின் மூலம் 10,776 மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாணவா்களுக்கான ஸ்டொ்லைட் கல்வித் திட்டம் 20 ஆயிரம் மாணவா்களை சென்றடைவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

அனில் அகா்வால் அறக்கட்டளையின் கீழ் வேதாந்தா குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊட்டச்சத்து, பெண்கள்- குழந்தைகள் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் விலங்குகள் நலன் ஆகிய திட்டங்களின் மேம்பாட்டுக்காக ரூ.5,000 கோடி வழங்க உறுதியளித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.