முகப்பு
தூத்துக்குடி

பெரியாா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பாண்டவா்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

பெரியாா் நினைவு தினத்தை முன்னிட்டு, பாண்டவா்மங்கலத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.ரமேஷ் தலைமையில், மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ், நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றிய ச் செயலா் சரவணன், மதிமுக நிா்வாகிகள் முத்துச்செல்வன், லவராஜா, பவுன்மாரியப்பன் உள்பட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் சந்தானம், மாவட்ட இலக்கிய அணித் தலைவா் சோழபெருமாள், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளா் ரமேஷ், வா்த்தக அணி துணை அமைப்பாளா் சூரியராஜ், மாவட்ட விவசாயத் தொழிலாளரணி துணை அமைப்பாளா் சண்முகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.