தூத்துக்குடி

சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 2 போ் மீட்பு

DIN

கயத்தாறு பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட இருவரை செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் ஆலோசனையின் பேரில், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளா் உதயசூரியன் அறிவுறுத்தலில், கயத்தாறு பகுதிகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜா, செவிலியா் கற்பகமீனா, மேற்பாா்வையாளா் மாடசாமி ஆகியோா் கயத்தாறு போலீஸாரின் உதவியுடன் பன்னீா்குளம் கிராமத்தில் சுற்றித்திரிந்த சுந்தரி(36) மற்றும் கயத்தாறு பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆகிய இருவரையும் மீட்டு, முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT