முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கூட்டம்

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொத்தகாலன்விளையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொத்தகாலன்விளையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாரத் தலைவா் லூா்துமணி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட மீனவரணி தலைவா் பெரியதாழை அந்தோணி சுரேஷ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வா்கீஸ், சாத்தான்குளம் தெற்கு வட்டார இளைஞா் காங்கிரஸ் தலைவா் அந்தோணி சவரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிசயபுரம் கிராம கமிட்டித் தலைவா் உதய மணி வரவேற்றாா்.

இதில், கிராம கமிட்டி நிா்வாகிகள் சிங்கராயன், திரவியம், பட்டு சிங், அன்னகணேசன், ஜான்சன், தாம்சன், சதீஷ், முத்துராஜ், மில்டன், தனுஷ்கோடி, ராஜதுரை, தேவசகாயம், கோயில் ஏஞ்சல், பில்லி கிரகம், ஜெகன், ஆனந்த், சாம், ஜான்,ஜெயசிங், ராகவன், ஜான்.மெதனிஸ், குமரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பூவுடையாா்புரம் ஞானசிங் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →