திசையன்விளை- ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் அவதி
திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம், நாசரேத் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம், நாசரேத் வழியாக இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம், நாசரேத், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி வழியாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அரசுப் பேருந்து தடம் எண் 263 எக்ஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து கடந்த ஓராண்டாக இயக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடம் எண் 163 எக்ஸ் அரசுப் பேருந்தை அதே வழித்தடத்தில், மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.