அபிஷேகப்பட்டியில் வாகனம் மோதி மான் பலி
திருநெல்வேலி ,அபிஷேகப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது.
திருநெல்வேலி ,அபிஷேகப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை வாகனம் மோதியதில் மான் உயிரிழந்தது.
அபிஷேகப்பட்டி காட்டுப்பகுதியிலிருந்து மான்கள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அடிக்கடி திருநெல்வேலி-தென்காசி சாலையைசாலையை கடந்து வருகின்றன. இதனால், வாகனங்களில் அடிபட்டு அவை உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகில் வாகனத்தில் அடிபட்டு ‘சுமாா் 4 வயதுள்ள ஆண் மான் ஒன்று திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தது. இது குறித்து கங்கைகொண்டான் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனத்துறையினா் வந்து உயிரிழந்த மானை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக எடுத்துச்சென்றனா்.