முகப்பு
தூத்துக்குடி

நெல்லை அரசு மருத்துவமனையில்தசை சிதைவுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தசை சிதைவு நோயாளிகளுக்காக புதன்கிழமைதோறும் சிறப்பு வெளிநோயாளி பிரிவு தொடங்கப்படவுள்ளதாக கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன் கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தசை சிதைவு நோயாளிகளுக்காக புதன்கிழமைதோறும் சிறப்பு வெளிநோயாளி பிரிவு தொடங்கப்படவுள்ளதாக கல்லூரி முதல்வா் எம்.ரவிச்சந்திரன் கூறினாா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முட நீக்கியல் துறை, உடலியல், மறுவாழ்வியல் துறை ஆகியவை இணைந்து நடத்திய மயோபதி என்று அழைக்கப்படும் தசை சிதைவு நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமை அவா் தொடங்கி வைத்து பேசியது:

தசை சிதைவு நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனையில் நடைபெறும் முதலாவது இலவச மருத்துவ முகாம் ஆகும். இனி, வாரந்தோறும் புதன்கிழமை இதற்காக சிறப்பு வெளிநோயாளி மருத்துவப் பிரிவு தொடங்கப்படவுள்ளது.

இம்முகாமில், எலும்பு, நரம்பு, நுரையீரல், இதயம், ரத்தப் பரிசோதனைகள் ஆகியவை இலவசமாக மேற்கொள்ளப்படும். 15 தினங்களுக்கான மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், தசைப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி குறித்த விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன என்றாா்.

தொடா்ந்து, தசை சிதைவு நோயாளிகளுக்கான சிறப்பு கையேடு வெளியிடப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை முடநீக்கியல் துறைத் தலைவா் என்.மணிகண்டன், உடலியல் மற்றும் மறுவாழ்வியல் துறை இணை பேராசிரியா் பி.உதயசிங், விஜயா நினைவு டிரஸ்ட் நிறுவனா் மனோகா் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.