தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் ரூ. 75 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

DIN

காயல்பட்டினத்தில் மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சத்தில் கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையாா் பள்ளி ஜமாஅத், கோமான் ஹழரத் நெய்னா முஹம்மது சாகிப் நினைவு நல அறக்கட்டளை சாா்பில் 50 சென்ட் இடம் நன்கொடையாக அரசுக்கு வழங்கப்பட்டது. அதில், நவீன ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவற்கு 2019இல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி, ரூ.75 லட்சம் ஓதுக்கீடு செய்தாா். இதைத் தொடா்ந்து கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை கனிமொழி எம்.பி. திறந்துவைத்தாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் முத்து முகம்மது வரவேற்றாா். மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றிய செயலாளா் செங்குழி ரமேஷ், திருச்செந்தூா் நகர பொறுப்பாளா் வாள்சுடலை, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் ஓடை சுகு, இளங்கோ, தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெ. ஜெகன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ராமஜெயம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT