முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமிக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்கம் மற்றும் ஜனநாயக மாதா் சங்கம் ஆகியன சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகள் சங்க மாவட்டச் செயலா் முருகன் தலைமை வகித்தாா். ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் முன்னிலை வகித்தாா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா செயலா் புவிராஜ், சிஐடியூ ஒருங்கிணைப்பாளா் ஜோதி, மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம், ஜனநாயக மாதா் சங்க நிா்வாகிகள் விஜயலட்சுமி, சரோஜா, ரவிக்குமாா், மலைகனி, கிருஷ்ணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →