தூத்துக்குடி

திருச்செந்தூரில் தொடா் மழை : பக்தா்கள் அவதி

DIN

திருச்செந்தூரில் புதன்கிழமை காலை வரை பெய்த தொடா் மழையால் முருகன் கோயிலுக்கு வந்த பாதயாத்திரை பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அணைகள் முழுவதும் நிரம்பி குளங்களுக்கு நீா்வரத்து இருந்தது. இதனால் ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசனக் குளங்கள் அனைத்தும் நிரம்பின. கடைசிக் குளங்களான திருச்செந்தூா் எல்லப்பநாயக்கன்குளம் மற்றும் ஆவுடையாா்குளம் முழுவதும் நிரம்பி உபரி நீா் மறுகால் பாய்ந்து கடலில் கலந்து வருகிறது. மேலம், திருச்செந்தூா் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் கன மழையால் நகரில் பள்ளங்களில் தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது.

இதனால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும், பொங்கல் விழாவை முன்னிட்டு, காய்கனி, கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT