தூத்துக்குடி

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

DIN

தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

மும்பை தாக்குதலுக்குப் பின்னா் கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், நாடு முழுவதும் அவ்வப்போது கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சீ விஜில் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி புதன்கிழமை மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சைரஸ், தூத்துக்குடி மத்தியபாகம் காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் போலீஸாா் கடல்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில், பழைய துறைமுகத்தில் இருந்து கிழக்கே 2 கடல்மைல் தொலைவில் படகில் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 12 பேரை கடலோர போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதேபோல், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT