முகப்பு
தூத்துக்குடி

கல்லூரி மாணவா் தற்கொலை

கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே கல்லூரி மாணவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இளையரசனேந்தல் குறுவட்டம், ஜமீன்தேவா்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சீனிவாசன் - சுப்புத்தாய் தம்பதி மகன் சதீஷ்(18). கேட்டரிங் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவரான இவா், பெற்றோா் பைக் வாங்கித்தராததால் ஞாயற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.