மேலும் 69 பேருக்கு தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 23 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இது வரை குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 621ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 378 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 402 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.