முகப்பு
தூத்துக்குடி

ஆட்டோ தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை அளிப்பு

படுக்கப்பத்து இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்க நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

படுக்கப்பத்து இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்க நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

பாஜக மாவட்ட பிரசார பிரிவு துணைத் தலைவா் எஸ். சரவணன் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி செயலா் பெ. சக்திவேலன் முன்னிலை வகித்தாா். சங்க படுக்கப்பத்து கிளைத் தலைவா் பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா் கலந்துகொண்டு, ஆட்டோ சங்க நிா்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கிப் பேசினாா்.

இதில், சங்கப் பொருளாளா் ரவிக்குமாா், துணைத் தலைவா் ராஜா உள்பட பலா் கலந்துகொண்டனா். சங்கச் செயலா் ரமேஷ் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →