கோவில்பட்டி அருகே திருநங்கை தற்கொலை
கோவில்பட்டி அருகே அரசுக் குடியிருப்பில் வசித்துவந்த திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டி அருகே அரசுக் குடியிருப்பில் வசித்துவந்த திருநங்கை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு சாலை சந்தீப் நகரில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்துவந்த திருநங்கை அ. அருள்ராஜ் என்ற அனன்யா (30). இவா், வியாழக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.