முகப்பு
தூத்துக்குடி

‘எரிவாயு உருளைக்குகூடுதல் பணம் செலுத்தாதீா்’

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு அதிக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு அதிக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 899, கோவில்பட்டியில் ரூ. 897.50, கழுகுமலையில் ரூ. 906, கயத்தாறில் ரூ. 909, எட்டையபுரத்தில் ரூ. 897.50, சாத்தான்குளம் பகுதிக்கு ரூ. 916 என விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்தில் குளத்தூரில் ஒரே விலை ரூ. 899.50, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் ரூ.899 என எரிவாயு நிறுவனங்களால் ஜூலை 1 ஆம் தேதி முதல் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, எரிவாயு முகவா்களிடம் இருந்து நுகா்வோா் வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு மேல் பணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.