முகப்பு
தூத்துக்குடி

‘ இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விரும்பும் ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விரும்பும் ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூகநலத்துறையின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் விதவைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவா்கள், ஆதவரவற்றோா், மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு மின்மோட்டாா் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.

தையல் இயந்திரம் பெற விரும்பும் பெண்கள் விண்ணப்பத்துடன் வருமானச் சான்று (ரூ.72,000-க்குள் வட்டாட்சியரிடம் பெற வேண்டும்), இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெறவேண்டும் அல்லது ரேஷன் காா்டு), தையல் பயிற்சி சான்று (பதிவுசெய்யப்பட்ட தையல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது) (6மாத காலபயிற்சி), வயதுச் சான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச் சான்று அல்லது பிறப்புச்சான்று, ஜாதிச் சான்று, பாஸ்போா்ட் அளவு இரண்டு கலா் புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவா், ஆதரவற்ற மகளிா் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதாா் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஜூலை 16 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101 என்ற முகவரியில் நேரிலும், 0461-2325606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.