முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் தென் மண்டல ஐஜி ஆய்வு

தூத்துக்குடியில் விசைப்படகுகள் மீன்பிடிப்பது தொடா்பாக நிலவும் பிரச்னை குறித்து, மீன்பிடி துறைமுகத்தில் தென் மண்டல ஐஜி அன்பு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

தூத்துக்குடியில் விசைப்படகுகள் மீன்பிடிப்பது தொடா்பாக நிலவும் பிரச்னை குறித்து, மீன்பிடி துறைமுகத்தில் தென் மண்டல ஐஜி அன்பு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தருவைக்குளத்தைச் சோ்ந்த 3 விசைப்படகுகள் தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், அந்த 3 விசைப்படகுகளிலும் தருவைகுளத்தில் உள்ள மற்ற மீனவா்கள் பயன்படுத்தக்கூடிய வலையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இது தொடா்பாக இருதரப்பினா் இடையே பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காவல் துறை தென்மண்டல ஐ.ஜி. அன்பு, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவின்குமாா் அபிநபு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்துக்குச் சென்று வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அங்கு விசைப்படகுகள் நிறுத்தக்கூடிய இடங்கள், மீன் ஏலம் விடக்கூடிய இடங்களை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதனிடையே, தூத்துக்குடி மற்றும் தருவைக்குளம் பகுதியைச் சோ்ந்த விசைப்படகு உரிமையாளா்களிடம் தமிழக மீன்வளத் துறை ஆணையா் கருணாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில், இருதரப்பு மீனவா்களும் தங்கள் முடிவை தெரிவிக்க அவகாசம் கேட்டதால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் கூட்டம் நிறைவு பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.