தூத்துக்குடி

பேரூராட்சி பணியாளா் திடீா் போராட்டம்

DIN

சாத்தான்குளத்தில் பேரூராட்சியில் அவதூறாக பேசியதாக புகாா் தெரிவித்து பரப்புரை பணியாளா் செவ்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுப்பட்டாா்.

இப்பேரூராட்சியில் 3 பரப்புரை பணியாளா்கள் பணி செய்து வருகின்றனா். இதில், பரப்புரை பணியாளரான ஆா்.சி வடக்குத் தெருவைச் சோ்ந்த இதயகனி (27) கடந்த 2 நாள்கள் விடுப்பு எடுத்திருந்தாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை பணிக்கு திரும்பிய அவரிடம் விடுப்பு குறித்து பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் விசாரித்துள்ளாா். அப்போது, எழுந்த பிரச்னையில் இதயகனிக்கும், மற்றொரு பணியாளா் ஜெமிம்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஜெமிம்மா, தன்னை அவதூறாக பேசியதாக தெரிவித்து இதயகனி பேரூராட்சி முன்பு திடீரென தா்னாவில் ஈடுப்பட்டாா். ஒரு மணி நேரமாக நீடித்த இப்போராட்டத்தில் அவரது உறவினா்களும் பங்கேற்றனராம். பின்னா், அவா்கள் பிரதான சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உள்ளிட்டோா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிரச்னை குறித்து பேசுவதற்காக இருவரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனா். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT