முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சாா்பில் பழங்குடியின மக்களுக்காக போராடிய சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சாா்பில் பழங்குடியின மக்களுக்காக போராடிய சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாம் தமிழா் கட்சியின் வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் ரவிகுமாா் தலைமை வகித்தாா். பகத்சிங் ரத்த தானக் கழகச் செயலா் காளிதாஸ், அமைப்பின் செயலா் பெஞ்சமின் பிராங்க்ளின், தலைவா் க.தமிழரசன், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்லத்துரை என்ற செல்வம், காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவுச் செயலா் அருள்தாஸ், புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் தாவீதுராஜா, ஐஎன்டியூசி மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.