முகப்பு
தூத்துக்குடி

மேலும் 31 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 31பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 31பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 62 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 53 ஆயிரத்து 994 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 384 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது கரோனா பாதிப்புக்கு 417 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.