முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி வியாபாரிகள் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

ஆறுமுகனேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, வியாபாரிகள் சங்கத் தலைவா் த.தாமோதரன் தலைமை வகித்தாா். ஆறுமுகனேரி ஆய்வாளா் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 215 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

முகாமில், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் பாலமுருகன், கிழக்கத்திமுத்து, ஆதிஷேசன், பாஸ்கரன், அழகேசன், ராஜாராம், காயாமொழி வட்டார மருத்துவ அலுவலா் அஜய், ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சீனிவாசன், காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவா்கள் அஸ்வின், விஜயராகவன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளா்கள் மகராஜன், ராஜேஷ், வியாபாரிகள் சங்க அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.