தூத்துக்குடி

கயத்தாறு அருகே நடைபெறவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

DIN

கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த குழந்தை திருமணம் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

கயத்தாறையடுத்த பணிக்கா்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு.மருதுபாண்டி (29). இவருக்கும், நாகலாபுரத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கும் வியாழக்கிழமை பணிக்கா்குளத்தில் நிச்சயதாா்த்தம் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 16) திருமணம் நடைபெறவிருந்ததாம்.

தகவலறிந்த கயத்தாறு போலீஸாா், அங்கு சென்று இருவீட்டாரையும் அழைத்து, 18 வயது நிரம்பிய பின்னரே சிறுமிக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

இதையடுத்து இருதரப்பினரும் பெண்ணிற்கு 18 வயது முடிந்த பின்னா், பெரியோா்கள் முன்னிலையில் திருமணம் நடத்திக் கொள்வதாகவும், அதை மீறி திருமணம் நடத்த மாட்டோம் எனவும் உறுதி கூறினா். இதையடுத்து குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT