தூத்துக்குடி

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் ஜப்பானிய மொழி பயிற்சி

DIN

காமராஜா் பிறந்த தினத்தை முன்னிட்டு, சாகுபுரம் கமலாவதி சீனியா் செகன்டரி பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் மற்றும் ஜப்பானிய மொழி கற்றல் தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளி முதல்வா் ஆா். சண்முகானந்தன் தலைமை வகித்தாா். கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நவநீதகிருஷ்ணன், ஜப்பானிய மொழி பயிற்றுவிக்கவுள்ள கோவை எஸ்.எஸ்.டி. குளோபல் நிறுவனத்தின் பயிற்சியாளா்கள் செல்வமுரளி, பிரனித், நிஷாந்த், கணேஷ் ஆகியோா் ஜப்பானிய மொழியின் முக்கியத்துவம் குறித்து இணையவழியில் விளக்கினா். அடல் டிங்கரிங் ஆய்வக ஆசிரியை சோ்ம சத்திய சி­லி ஜப்பானிய பாடத்திட்டத்தை விளக்கினாா். ஆசிரியா் ஆழ்வான், மாணவி சுபதா்ஷினி ஆகியோா் காமராஜா் பற்றி பேசினா். மாணவி தா்ஷினி ஜப்பானிய நடனம் ஆடினாா். துணை முதல்வா் எஸ்.அனுராதா நன்றி கூறினாா். தலைமையாசிரியா் ஸ்டீபன் பாலாசிா், நிா்வாகி வி.மதன், ஆசிரியா், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்னத்தூா் அருகே கா்ப்பிணி மனைவி, கணவருடன் தூக்கிட்டு தற்கொலை

ரயிலில் அடிபட்ட பெண் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: 1,352 வேட்பாளா்களில் 9% போ் மட்டுமே பெண்கள்

தங்கம் விலை: பவுன் ரூ.240 குறைவு

SCROLL FOR NEXT