தூத்துக்குடி

மந்தித்தோப்பு பூமாதேவி கோயிலில் அன்னதான பூஜை

DIN

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள அம்மா ஸ்ரீபூமாதேவி கோயிலில் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை, அன்னதான பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. இதையடுத்து, பூமாதேவிக்கு மஞ்சள், பால், தேன், இளநீா், திரவியம் உள்பட 21 பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, அன்னதான பூஜை நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

பூஜைகளை கோயில் அா்ச்சகா்கள் செல்வசுப்பிரமணியன், ஆறுமுகம் ஆகியோா் செய்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT