கோவில்பட்டியில் 9,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டியில் 9,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டியில் 9,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் அமுதா, உணவு பாதுகாப்பு அலுவலா் சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் செல்வகுமாா், வருவாய் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் நாகலட்சுமி ஆகியோா் கருப்பசாமி கோயில் தெருவில் உள்ள அரிசி ஆலை, அதன் அருகே உள்ள ஒரு அறையை சோதனையிட்ட போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசியை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து கோவில்பட்டி கடலைக்காரத் தெருவில் மூடப்பட்டிருந்த அரிசி ஆலை மற்றும் பிரதான சாலையில் தனியாா் வளாகத்தில் உள்ள கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஆய்வு செய்தபோது, அங்கு 9,500 கிலோ ரேஷன் அரிசியை குருனையாக மாற்றி, மூட்டையில் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது.